முதலில் தோல்வி…! விடா முயற்சி…. இறுதியில் வெற்றி..!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வசிக்கிறார் விஜயகுமார். அங்கிருந்து மன்னாருக்கு கூலிவேலைக்குச் சென்று, தனது குடும்பத்தை நடத்திவந்தார். இப்படியே புதுக்குடியிருப்புக்கும் மன்னாருக்கும் இடையே மாறிமாறி எத்தனை நாட்கள் அலைவது..? 


ஏதாவது சிறிய தொழில்முயற்சியில் ஈடுபடலாம் என்று விஜயகுமாரும் அவரது மனைவியும் தீர்மானித்தார்கள். அதன்படி சிறிதளவு மிக்சர் உற்பத்தி செய்து, தமக்குத் தெரிந்த கடைகளுக்கு கொடுத்தார்கள். ஆரம்பத்தில் அவரது உற்பத்தியை யாருமே வாங்கவில்லை. 


சந்தையில் ஏற்கனவே பெரிய பெரிய நிறுவனங்களது மிக்சர்கள் விற்பனையில் இருந்ததால், ‘நிலுக்சன் மிக்சர்’ எனும் பெயரில் இவர்கள் உற்பத்தி செய்த எதுவுமே விற்பனை ஆகவில்லை. ஆனாலும் விஜயகுமார் தம்பதிகள் முயற்சியைக் கைவிடவில்லை. 


வேறுவேறு கடைகளைத் தேடிப்பிடித்து தமது பொருட்களை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். தொடக்கத்தில் நிலுக்சன் மிக்சரை சுவைத்துப் பார்த்த சிலர், அதன் தரம் நன்றாக இருப்பதாகப் பாராட்ட, அதுவே ஒரு அறிமுகமாகவும் விளம்பரமாகவும் மாறிப்போனது. 


நாளுக்கு நாள் விற்பனை மெல்ல மெல்ல அதிகரிக்க, விஜயகுமார் தம்பதியினர் தமது உற்பத்தியை அதிகரிக்க ஆரம்பித்தார்கள். இன்று கடைக்காரர்களே தொலைபேசியில் அழைத்து ‘எமக்கு இவ்வளவு தொகை மிக்சர் வேண்டும்’ என்று கூறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் நிலுக்சன் மிக்சர் உற்பத்தியாளர்களான இந்த புதுக்குடியிருப்பு தம்பதிகள். 


இவர்களின் விடாமுயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்

.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.