மிரள வைத்த இந்திய வீரர் !


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

முகமது ஷமி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் முகமது ஷமி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

இந்தத் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தனது பந்துவீச்சு மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. குறிப்பாக இந்த வீடியோவை 4.3 லட்சம் பேர் Like செய்துள்ளனர். இதற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ எதுபற்றியது என்றால், தனது சொந்த ஊரான சஹஸ்புருக்கு ஷமி வந்துள்ள விடயம் அவரது ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது.

உடனடியாக அவரது பண்ணை வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக குவிந்தனர். இதனால் அங்கு பாதுகாவலர்கள் ரசிகர்களை வரிசையாக நிற்க வைத்து, பின் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இன்று இவ்வளவு ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ள ஷமி சிறுவயதில் பேருந்து, டிராக்டர், லொறிகள் ஓட்டியுள்ளார்.  

Mohammed Shami AP

சிறுவயதில் பல வாகனங்களை ஓட்டிய ஷமி 

இதுகுறித்து அவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் பைக், கார்கள், டிராக்டர்கள், பேருந்து மற்றும் லொறிகள் ஆகியவற்றை ஓட்டியிருக்கிறேன். பயணம் செய்வது மற்றும் மீன் பிடித்தல் எனக்கு பிடிக்கும். வாகனங்கள் நிறைய ஓட்டுவேன். பைக் மற்றும் கார்கள் ஓட்டுவது பிடிக்கும். நெடுஞ்சாலையில் பைக் ஓட்டுவேன்.

இந்தியாவுக்கு விளையாட தொடங்கிய பின்னர் பைக் ஓட்டுவது குறைந்து, பின்னர் அதனை நிறுத்தி விட்டேன். சில சமயங்களில் என்னுடைய தாயாரை சந்திக்க கிராமத்திற்கு செல்வேன்.

என்னுடைய பள்ளி நண்பர்களில் ஒருவரின் வீட்டில் லொறி இருந்தது. அதனை ஓட்டுபடி என்னிடம் கூறும்போது, நான் சிறுவனாக இருந்தேன், அதனை ஓட்டினேன்.

அதன் பின் ஒருமுறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். இதுபற்றி அறிந்த என்னுடைய தந்தை திட்டிவிட்டார்' என தெரிவித்துள்ளார். 

Mohammed Shami Rafiq Maqbool/ AP Photo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.