கருப்பினப்பெண்ணை தொடர்ந்து அவமதித்துவந்த பிரான்ஸ் பிரபலம்!

கருப்பினப்பெண்ணை தொடர்ந்து அவமதித்துவந்த பிரான்ஸ் பிரபலம்: அடுத்து நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் | French Celebrity Continues To Insult Black Womenபிரான்ஸ் நாட்டவரான பிரபலம் ஒருவர், சமூக ஊடகங்களில் எழுத்தாளர், ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், இன, பாலின மற்றும் மத சமத்துவமின்மைக்கெதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்ட கருப்பினப்பெண் ஒருவரை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்.

478 முறை விமர்சித்த பிரபலம்

Raphaël Enthoven என்னும் அந்த பிரான்ஸ் ஊடகப் பிரபலம், Rokhaya Diallo என்னும் அந்த கருப்பினப் பெண்ணைக் குறித்து 2019க்கும் 2021க்கும் இடையில் மட்டுமே 478 முறை விமர்சித்து வம்புக்கிழுத்துள்ளார்.

தன்னை விட்டு விடுமாறு Diallo கேட்டுக்கொண்ட நிலையிலும் அவரது விமர்சனங்கள் தொடர்ந்துள்ளன.


இந்நிலையில், 2020ஆம் ஆண்டு, Dialloவும் மற்றொரு எழுத்தாளரும் சமூக ஊடகம் ஒன்றில் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அந்த எழுத்தாளர் Enthovenஐக் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

உடனே Diallo, அவரைக் குறித்த கருத்துக்களை அகற்றிவிடுங்கள், அவரைக் குறித்து பேசவேண்டாம், அவரது தொடர்ச்சியான விமர்சனங்கள்தான் நன்றாகத் தெரிந்தவைதானே என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவம்

அடுத்து இப்படி ஒரு விடயம் நடக்கும் என Diallo கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆம், சமூக ஊடகத்தில் அவர் குறிப்பிட்ட செய்தியை வைத்து அவர் மீது வழக்குத் தொடர்ந்துவிட்டார் Enthoven.

அவர் மீது அவதூறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குட்படுட்தப்பட்டுள்ளார் Diallo. பிரான்சைப் பொருத்தவரை, அவதூறு வழக்கு என்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கு கடுமையான அபராதமோ சிறைத்தண்டனையோ கூட வழங்கப்படலாம்.

வழக்கை எதிர்கொண்டு, செலவுகளை எதிர்கொண்டு ஒரு வழியாகிவிட்டார் Diallo. நல்ல வேளையாக, நீதிமன்றம் Dialloக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. அவர் எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், இன்னமும் தீர்ப்பை எதிர்த்து Enthoven மேல்முறையீடு செய்யலாம் என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது Dialloக்கு.

Enthovenஐப் பொருத்தவரை, அவர் இப்போதும் ஜாலியாக தொலைக்காட்சி பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார், உள்ளூர் ஊடகங்களும் அவருக்கு ஆதரவாகவே உள்ளன!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.