கேப்டனாக சுப்மன் கில்-லுக்கு இன்னும் அனுபவம் தேவை!


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ் முரண்பாடான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா

அடுத்த ஆண்டுக்கான நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு தற்போது இருந்தே அணிகள் தயாராக தொடங்கிவிட்டன.

சில தினங்களுக்கு முன்பு தான், ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைத்த வீரர்கள், விடுவித்த வீரர்கள் மற்றும் அணிகளுக்கு இடையே பரிமாறிக் கொண்ட வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியிட்டனர்.அதில், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரூ. 15 கோடிக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா வெளியேறியதை தொடர்ந்து, குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

அனுபவம் தேவை

இந்நிலையில் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து  முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், கேன் வில்லியம்சன் குஜராத் அணியின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் பார்த்த பிறகு, அவர் குஜராத் அணிக்கு ஒரு முறையாவது கேப்டனாக இருக்க வேண்டும் நினைத்தேன்.

அதற்காக சுப்மன் கில் கேப்டன் பொறுப்பிற்கான தவறான தேர்வு என்று கூறவில்லை. ஆனால் முக்கியமான ஒரு பொறுப்பை ஏற்பதற்கு உங்களுக்கு அனுபவம் தேவை என ஏ.பி. டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.