பாலா அண்ணன் - எம் இனத்தின் படிமானம்!


அண்ணன் பாலா
வித்துவச் செருக்குடனே
தத்துவத்தை வரையறுக்கும்
தத்துவாசிரியன்.
அண்ணன் பாலா
பூகோள அரசியலை
புடம்போட்ட எங்கள்
புகழாளன்.
அண்ணன் பாலா
வெள்ளச்சி ஒருத்திக்கு
வரிப்புலி அணிவித்த
புலிமானன்.
அண்ணன் பாலா
தானைத் தலைவனுக்கு
தக்கானாய் மதியுரைத்த
தலைஞானி.
பாலா அண்ணன்
தன்மானம் கொண்டெழுந்த
தமிழின எழுச்சியின்
அடையாளம்.
அண்ணன் பாலா
தன்னாட்சி கண்டுறைந்த
தமிழீழ அரசியலின்
அகராதி.
அண்ணன் பாலா
தேசத் தெருவெங்கும்
தானாய் எழுந்தருளும்
எழுந்தருளி.
அண்ணன் பாலா
தான்தோன்றி எனக்கண்ட
தமிழ் இனத்தின்
படிமானம்.
-:நடராஜர் காண்டீபன்:-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.