தமிழினத்தின் சாபக் கேடு!
தமிழீழ விடுதலைக்கான உரிமைக் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கும் காலத்தில் இவர்கள் நடத்தும் ஓரங்க நாடகம் கண்டனத்திற்குரியது!
எதிரிக்குச் சலாம் போட்டு ஈழத்தமிழினத்தின் உரிமையை இனப்படுகொலையாளிகளிற்கு அடகு வைத்து மண்டியிட்டு விலைபேசும் (தறு) தலைகளிற்கு தமிழினம் கண்டித்து தக்க பதில் உரைக்க வேண்டும்!
யாரைக் கேட்டு போராடும் எம் ஈழ தேசிய மக்களை தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக்க் கூறி எதிரியிடம் சரணடைகின்றார்கள்? யார் கொடுத்த உரிமை?
இவர்கள் எம் பிரதிநிதிகள் அல்ல!!!
ஈழத்தமிழினத்தின் அரசியல் தீர்வுகளை தாமாக எதேச்சையாக முடிவெடுக்க இவர்களிற்கு உரிமை இல்லை!
இதனை உரிமைக்காகப் போராடும் உலகத் தமிழினம் அனைத்துலகிடம் ஓங்கி உரத்துச் சொல்ல வேண்டும்!
போராடிப் பெறுவதே உரிமை! விலை பேசும் மாந்தர்களை மக்கள் சக்தி தூக்கி எறிய வேண்டும்!
கருத்துகள் இல்லை