வாழ்வின் சிறப்பு - சிந்தனைக்கு!!

 


பக்கத்து பக்கத்து வீட்டில் ஒரு சேவலும் பெட்டைக்கோழியும் இருந்தது. சேவல் விதம் விதமான குரலில் கூவி கூவி பெட்டைக்கோழியை கிண்டலும் நய்யாண்டியும் செய்து கொண்டு என்னைப் போல் உன்னால் கூவ முடியாது நீயொரு பெட்டைக்கோழி என்றது . தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டே காலை மதியம் மாலை என  கூவி ஆத்திரத்தை தூண்டியது.


இதனால், கோழிக்கு ஆத்திரம் தலைக்கேறி சேவலை ஒரு கை பார்க்க வேண்டும் என்று கிளம்பி போக, இதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்திருந்த பருந்து ஒரு குஞ்சை தூக்கிக் கொண்டு பறந்து போனது . குஞ்சுகளின் அழு குரல் கேட்டு வந்த பெட்டைக்கோழி ஒரு குஞ்சை காணவில்லையே என்று வேதனையில் துவண்டு போனது.


ஆமாம், அப்போது தான் உணர்ந்தது கோழி பிறரின் தூண்டுதலினால் வந்த ஆத்திரம் என்னை மதி கெட்டு போக வைத்து சந்தோஷமாக இருந்த எனது குடும்ப வாழ்க்கையில் துக்கத்தை தந்து விட்டதே!! என்று வேதனையில் துவண்டு போனது.


மேலும், அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டில் ஆரவாரம் சேவல் கோழியின் மரண ஓலம் கேட்டதும் பெட்டைக் கோழிக்கு கதிகலங்கி போனது.


ஆமாம், பக்கத்து வீட்டில் விருந்தாளிகள் வந்ததால் சேவல் தான் அன்று கோழிக்கறியானது. இப்போது பெட்டைக்கோழி தனது குஞ்சுகளை பார்த்து சொன்னது.


" என் அருமை குஞ்சுகளே!! ஆணவத்தால் பிறருக்கு தீங்கு செய்தால் என்றாவது ஒரு நாள் அந்த ஆணவம் கொண்டவரை இறைவன் தண்டிப்பது நிச்சயம். நீங்கள் பிறரின் மனம் நோகும் படி ஒரு காலமும் நடந்து கொள்ள வேண்டாம்."


அதேபோல், " மற்றவர்களின் தூண்டுதலால் பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்தால் என்னைப் போல் சந்தோஷத்தை இழந்து வேதனையில் மூழ்க வேண்டிய நிலை வரும் ஆதலால், ஆத்திரம் கண்ணை மறைக்கும் " என்று புத்திகள் சொல்லி கொண்டு சேவல் கோழியை நினைத்து மனதுக்குள் ஒரு வகையான பாசத்தால் அழுது கொண்டது பெட்டைக்கோழி.


   நன்றியுடன்,

   உங்கள் ஐனி,

   கிண்ணியன்,

   2023/12/19.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.