கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்!!

 


இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தலைமை அதிகாரியாக முன்னாள் வீரர் உபுல் தரங்க நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளிவருகின்றன.

மேலும், 26 வயதான வனிந்து ஹசரங்க 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக தனது முதலாவது டி20 போட்டியில் விளையாடினார்.

அவர் தற்போது வரை 58 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐசிசி டி20 பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கடந்த காலத்தில் முதலிடத்தில் இருந்த வனிந்து, தற்போது தரவரிசையில் 03வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.