நாடு திரும்பினார் கில்மிஷா!!

 


தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரிகமப   சீசன் 3 இசை நிகழ்ச்சியில் வெற்றிமகுடம் சூடிய ஈழத்துக் குயில் கில்மிஷா இன்றைய தினம் (28.12.2023) தாய்மண்ணை வந்தடைந்துள்ளார்.

யாழ் - பலாலி சர்வதேச விமான நிலையத்தினூடாக தனது குடும்பத்தாருடன் கில்மிஷா நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஈழத்துக் குயில் கில்மிஷாவின் வெற்றியைக் கொண்டாடும் ஆரவாரிப்பில் இரசிகர்கள் யாழ் - பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல மணிநேரம் காத்திருந்து கில்மிஷாவை கோலாகலமாக வரவேற்றுள்ளனர்.

ஈழத்துக் குயில் கில்மிஷாவின் வெற்றியைக் கொண்டாடும் ஆரவாரிப்பில் இரசிகர்கள் யாழ் - பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல மணிநேரம் காத்திருந்து கில்மிஷாவை கோலாகலமாக வரவேற்றுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.

கௌரவிப்பு நிகழ்வில் சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.