மதுவை விலக்குவோம்!!

 


மது எனும்  விஷத்தைப் பற்றி ஐயா விஜய் சித்தராமன் அவர்கள் மிகச் சரியாக  கூறியுள்ளார்.. வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற காணொளியை பார்க்கச் செய்யுங்கள்.. எதிர்காலத்தில் மது என்ற விஷயத்தை கையில் எடுக்க மாட்டார்கள்.


 மேலே உள்ள காணொளியில் ஐயா சீதாராமன் அவர்கள் கூறியதை தனியாக எழுதி வைத்துக்கொண்டு அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களுக்கு சோசியல் மீடியா மார்க்கெட்டிங் இலவசமாக கற்றுத் தரப்படும்..  குழந்தைகள் படித்துக் கொண்டு மாதம் 5000 முதல் பத்தாயிரம் வரை சம்பாதிக்க முடியும்..  


 ஆங்கிலம் தெரிந்தவர்கள் பல லட்சம் சம்பாதித்தது  அந்த காலம்(1990  - 2000) அன்று நூற்றில் பத்து பேர் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருந்தனர்... ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது.. நூற்றுக்கு 70 பேர் ஆங்கிலம் நன்றாக பேசுபவராக இருக்கின்றனர்.. ஆனால் அன்று நம்மைச் சுற்றி நமது நாட்டுரக காய்கறிகள்,   பழங்கள், பருப்பு வகைகள், அரிசி வகைகள்  அனைத்தும் அதிகமாக இருந்தது அவற்றை சாப்பிட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தனர்.. பன்னாட்டு சிற்றுண்டிகள் அதிகம் இல்லை கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய்,  நாட்டு வெல்லத்தில் செய்த இனிப்புகள், பச்சை பயறு, கொய்யாப்பழம்  போன்றவை சாப்பிட்டு குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன..


 ஆனால் இன்று அமெரிக்க மருத்துவமஃபியாக்களால் ஆய்வகத்தில் கண்டறியப்பட்ட ஹைப்ரிட் காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், அரிசி அதிகம் உள்ளது.  உயிரைக் கொல்லும்  இரசாயனங்கள் தெளித்து வளரும் ஹைபிரிட் உணவு பொருட்களை சாப்பிட்டு புற்றுநோய் செல்கள்  அதிகமாக ரத்தத்தில் அதிகமாக காணப்படுகிறது.. அதிகமான மக்கள் நோய்வாய்பட்டு உள்ளனர் நல்ல உணவை அதிகமான மக்கள் தேடுகின்றனர்.. தொலைக்காட்சியில் விளம்பர செய்யப்படும் கார்ப்பரேட் பொருட்கள் அனைத்தும் விஷம் என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.. ரசாயனம் சேர்க்கப்படாத இயற்கை உணவை சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில்  தரமான உணவுப் பொருட்களை வாங்க வாங்க பேஸ்புக்,  இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்..

 தரமான பொருட்களை வாங்க நினைப்பவர்கள் யாரும் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் அல்லது மால்களுக்கு செல்வதில்லை சோசியல் மீடியா மூலம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து விற்பனை செய்யும் பொருட்களை வாங்கி கொள்கின்றனர்...


 நீங்கள் தரமான பொருட்களை சரியான விலையில் கொடுக்கும் போது உங்களுக்கு சோசியல் மீடியா மூலம் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பது எங்களது கருத்து.. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்கள் தரமான பொருட்களை தேடி வருகின்றனர்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தரமான பொருட்களை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும்போது நல்ல ஆதரவை பெறுவீர்கள்.. தொடர்ச்சியாக உங்களது விற்பனையும் அதிகரிக்கும்..


 அதை விட்டுவிட்டு வீணாக CBSCE, ICC போன்ற ஜெயிலில் அடைத்து குழந்தைகளை வெளியுலகம்,  தெரியாமல்,  உடல் உள்ளுறுப்புகள் பற்றி  தெரியாமல்  வளர்த்து விடாதீர்கள்.. இது புற்றுநோயை உண்டாக்கும் கவர்ச்சியான உணவு பொருட்கள் நிறைந்துள்ள உலகம்..


யதார்த்தம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.