இறுதிக்கணம் வரை உடனிருந்து விஜயகாந்த்துக்கு விடை கொடுத்த மன்சூர்அலிகான்!!
இந்திய நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றைய தினம் (27-12-2023) உடல்நிலை குறைவால் காலை காலமானார்.
இதன்போது, சாலிகிராமம் வீடு தொடங்கி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடந்த நல்லடக்கம் வரை விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலங்கிய கண்களுடன் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேடுத்துள்ளார்.
திரையுலகில் காலடி எடுத்து வைத்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மன்சூர் அலிகானுக்கு அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்து அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த்.
இதேவேளை, 1991-ம் ஆண்டு கேட்பன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படம் தான் மன்சூர் அலிகானுக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
தமிழ் திரையுலகில் ஏராளமான நடிகர்கள், இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட்ட விஜயகாந்துக்கு, மன்சூர் அலிகானின் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்குள்ளது.
மன்சூர் அலிகான் விஜயகாந்துடன் இணைந்து ‘மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்’, ‘தாய்மொழி’, ‘ஏழை ஜாதி’ என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை