சீனப்பிரஜை மாயம்!!

 


இலங்கை - பயாகலவில் சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 54 வயதான Zhang Xiaolong என்ற சீன நபரொருவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

சீன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி வருகின்ற போதிலும், நேற்று (21.12) பிற்பகல் வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.