வெளிநாட்டு மோகம் - சிரிக்க அல்ல, சிந்திக்க!!


  •  70 களில் வெளிநாடு சென்று ஊர் திரும்பும் ஆட்களின் அலப்பறைகளுக்கு அளவு கணக்கு  இல்லாமால் இருக்கும்


அவர்கள் தங்கள் பெருமிதங்கள் என்றுநினைப்பது சில நேரம் பார்க்க வெறும் அற்பத்தனமாக இருக்கும்


 ஏன்,  கொழும்பில் கொஞ்சம் காலம் இருந்துட்டு வந்து யாழ்ப்பாண வெய்யிலை குற்றச்சாட்டி பெருமை படற ஆட்கள் கூட இருந்திருக்கினம்....


சத்தியமாக இது பகிடியில்லை ,  'ஒருவர் ஸ்டண்டாக ஒரு 5 வருடம் வெளிநாட்டில் இருந்திட்டு வந்து சந்தியில் இறங்கி கூப்பிடு தூரத்தில் இருக்கிற வீட்டுக்கு போற வழியை மறந்திட்டதாகச்'  சொன்ன சம்பவம் கூட நடந்திருக்குது என்றால்  பாருங்களேன்


ஒரு கதை இருக்கிறது, 

ஒரு தாய் கஸ்டப்பட்டு வளர்த்து பிள்ளையை ஆளாக்கி வெளிநாட்டு அனுப்பி இருந்தாவாம்


அந்தப் பிள்ளை வெளிநாட்டால்  வந்து தனது வெளிநாட்டு காதலியுடன் ஒரு உள்ளூர் சந்தைக்குச் சென்றாராம்,  அங்கு ஒரு கிழவி புளியம்பழம் விற்று கொண்டிருந்தாராம்


'இது என்ன இது?'  என்று தெரியாத மாதிரி தனது வெளிநாட்டு காதலிக்கு கலர் காட்டி கொண்டு, ஒரு மாதிரி கேட்டாராம்...


அதுக்கு கோபமடைந்த பாட்டி


இது தான் மோனை  '''   உன்ரை  கோத்தை வித்த கோணல் புளி ''என்றிச்சாம்.


இப்போது அப்படி இல்லை...எம்மவர்கள், தாய் நாட்டின் புழுதி வாசத்திற்காக ஓடி வருகின்றனர்...அந்த புழுதி அவர்களை ஆசுவாசப்படுத்துகிறது....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.