மலையக யுவதி, யாழில் விரிவுரையாளர்!!
மலையக பல்கலைக்கழக மாணவியான சக்திவேல் தக்ஷனி , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார்.
பூண்டுலோயாவிலிருந்து மிகத்தொலைவில் அமையப்பெற்ற பிரதேசமான, டன்சினன் வடக்கு பிரிவை (அக்கரமலை) சேர்ந்த சக்திவேல் தக்ஷனி (Shakthivel Dhakshani) 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் தமது இளங்கலைமாணி பட்டப் பாடநெறியை திறம்படக் கற்று முதல் வகுப்பில் (1st Class) சித்தியடைந்துளார்.
இந்நிலையில் , சக்திவேல் தக்ஷனி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை