அளம்பில் துயிலுமில்ல காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் குறித்த அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் இந்த இடத்தில் நாம் எமது உறவுகளை புதைத்துள்ளோம் இந்த காணியை அளவிட அனுமதிக்க மாட்டோம் என்றதன் அடிப்படையில் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை