இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களை உரிய முறையில் அனுசரிக்க பணிப்பு!

 


கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களை சரியாக முறையில் அனுசரிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்,

இன்று இடம்பெற்ற முன்னேற்பாட்டு கூட்டத்தில் மேற்படி அறிவுறுத்தினார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4000 பக்தர்கள் வருகை தர உள்ளார்கள் அவ்வாறு வருகை தருவோரை நாங்கள் எமது அயல்நாடான இந்தியாவில் இருந்து வருகை தருவோர் என கருதி அதாவது வெளிநாட்டிலிருந்து வருவோர் என கருதி அவர்களை சரியான முறையில் அனுசரிக்க வேண்டும்

அவர்களை வெயிலில் நிற்க வைக்காது அவர்களை உரிய முறையில் பரிசோதித்து அவர்களை ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்

குறிப்பாக அதிகளவு பரிசோதனை அதிகாரிகளை அந்த இடங்களில் நிறுத்தி உரிய பரிசோதனைகளை உரிய முறையில் வேகமாக செயற் படுத்தி அவர்களுக்கு இடையூறு அற்ற வகையில் செயற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்

கடந்த காலங்களில் இந்திய பக்தர்கள் நீண்ட நேரமாக வெயிலில் காத்து நின்று உரிய பரிசோதனைகளின் பின்னர் ஆலயத்திற்கு அனுமதிக்க பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவுறுத்தலை வழங்கினார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.