பாலைப் பொழிந்து தரும் பசுவைப் பாதுகாப்போமடி பாப்பா..!


இன்று பட்டிப்பொங்கல் . நேற்று தைத் திங்கள் முதலாம் நாள் சூரியபகவானுக்குப் பொங்கல் செய்து தமது நன்றிக் கடனைச் செலுத்திய விவசாயிகள் , இன்று பட்டிப் பொங்கல் செய்கின்றனர் .


ஆம் , இப்போதிருக்கின்ற நவீன தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் விவசாயிகளின் அத்தனை விவசாய முயற்சி களிலும் உறுதுணையாக இருந்த பசுக்களுக் கும் காளைகளுக்கும் நன்றி செலுத்தும் பொருட்டு பட்டிப்பொங்கல் செய்கின்ற பண்பாடு தைத்திங்கள் இரண்டாம் நாளாக வகுக்கப் பட்டது .


வயல்கள் , பயிர்செய் நிலங்களை உழுது பண்படுத்துவதற்கும் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கும் எருதுகளே விவசாயிகளின் உறுதுணையாயின .


தவிர , பசுக்கள் நிறை உணவாகிய பாலைத் தந்து விவசாயிகளினதும் அவர்களின் குடும் பத்தினதும் உடல் நலத்தைப் பாதுகாத்ததோடு பசும் பாலை விற்றுச் சீவியம் நடத்துவதற்கும் பசுக்கள் பேருதவி புரிகின்றன .


இவையாவற்றையும் கடந்து , இயற்கைப் பசளையாகிய மாட்டெரு பயிர்செய் விவசாயி கள் கணிசமான விளைச்சலைப் பெறுவதற்கு உதவிற்று .


உண்மை .சமகாலத்து அசேதனப் பசளை களும் கிருமிநாசினிகளும் உணவை நஞ்சாக்கி நிற்கின்ற இவ்வேளையில் , அன்று கோமயம் மிகச் சிறந்த பசளையாகவும் கோசலம் மிகச் சிறந்த கிருமிநாசினியாகவும் தொழிற்பட்டு தூய்மையான தானியங்கள் உணவாகக் கிடைப்பதற்கு வழிவகுத்தன .


ஆக , பசுக்களும் எருதுகளும் எங்கள் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உறவு .


பெற்ற தாய் போல் பாலைத் தருகின்ற பசுக் களைத் தாயாக - தெய்வமாகப் போற்றிய நம் தமிழினம் பட்டிப்பொங்கலைச் செய்து , பசுக்களுக்கும் எருதுகளுக்கும் நன்றி செலுத்தியது .


ஆனால் இன்று பட்டிப்பொங்கல் என்றால் என்ன ? என்று கேட்கின்ற அளவில் பட்டி களும் இல்லை . பசுக்களும் எருதுகளும் இல்லை என்றாயிற்று .


அந்தோ ! கொடுமை . தாயாக வழிபட்ட பசுக்களைக் கொன்று அதன் புலாலை உண் ணுகின்ற கொடுமை நம் மண்ணில் அரங் கேறும்போது ,


அம்மா என்று அழைக்கின்ற பசுக்களின் தலையில் ஓங்கி அடித்து அதனைக் கொன்று அதன் இறைச்சியை விற்று வாழ நினைக் கின்ற இந்தக் காலத்தில் , காலம் முழுவதும் தன் பாலைத் தந்து நம்மை வாழ வைத்த பசுவை இறைச்சிக்கு விற்று விட்டு நிம்மதி யாக இருக்கின்ற சூழ்நிலை வந்த பின்பு , பட்டிப் பொங்கல் எங்ஙனம் அர்த்தம் பெறும் .


ஓ ! பஞ்சகெளவியம் தந்த எங்கள் ஊர்ப் பசுக்களை இழந்து வருகின்றோம் . எஞ்சி இருக்கின்ற ஊர்ப் பசுக்களையும் களவாகக் கொன்று இறைச்சி கடத்துகின்ற ஆறறிவுக் கலாசாரம் சண்டித்தனத்தோடு சன்னதம் ஆடுகிறது .


அதைத் தடுத்து நிறுத்த வேண்டியவர் களே சன்னதத்துக்கு சல்லாரி போடுகின்றார் கள் என்றால் , என் செய்வோம் .


எம் அருமைக் குஞ்சுகளே ! இளம் பிஞ்சு களே ! பசுவைப் பாதுகாப்போம் என்று பாலர் வகுப்பில் படியுங்கள் . அதனை உங்கள் வாழ் நாள் முழுவதும் கடைப்பிடியுங்கள்.


வலம்புரி பத்திரிகை 16.01.2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.