யாழில் இரு பேருந்துகள் மோதி கோர விபத்து!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து விபத்துக்குள்ளாகியுள்ளன. பேருந்துகள் ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அம்புலன்ஸ் வண்டிகள் ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.