அயோத்தி ராமர் கோவில் இந்தியப் பிரதமரால் திறந்துவைப்பு!

 


இந்தியாவின் அயோத்தி நகரில் ராமர் கோவில் திறப்பு விழா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (22) நடபெற்றது.

அதன்படி, மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி 35 ஆண்டுகளாக அளித்துவந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமர் ஆலயம் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்புவிழா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

எதிர்வரும் மே மாதப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வமற்ற தொடக்கமாகவும் கோவில் திறப்புவிழா பார்க்கப்படுகிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டுப் பல மாநிலங்களில் இன்று (22) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியைக் காண அயோத்தி நகரின் வீதிகளில் குழுமியிருந்தனர்.

இதனால் எவ்வித அசம்பாவிதமும் நேராமல் இருக்க 10,000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாளை (23 ) முதல் கோவில் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

அடுத்த சில மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 100,000 பேர் ஆலயத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அயோத்தி ராமர் கோவில், இந்திய தேசத்தை ஒன்றிணைக்க உதவும் ஒரு தலம்” என்று பத்திரிகைக்கு அளித்த செய்தியொன்றில் பிரதமர் மோடி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.