நடிகர் ரக்சன் நடிக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் டீசர் வெளியீடு!

 விஜய் ரிவி தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகரும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ எனும் படத்தின் புகழ்பெற்ற நடிகருமான ரக்சன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

அறிமுக இயக்குநர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. இதில் ரக்சன், மலினா, தீனா, 'பிராங்க் ஸ்டார்' ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முனிஷ்காந்த், அகிலா, அருண்குரியன், விஸ்வத், மெல்வின் டென்னிஸ், முத்தழகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்திருக்கிறார்.



பாடசாலையில் பயிலும் மாணவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபிலா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ரகு, ரமேஷ், ஜனார்த்தன் சௌத்ரி மற்றும் இரா.கோ. யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டீசரில் 90 களின் நாஸ்டாலாஜிகஸ் என்பதும், வளரிளம் பருவ காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாலும் இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.