இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் இன்று!!
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று (21) திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும், எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.
இன்று இது பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது. பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது.
மேலும், தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அந்த கடமையை சரியாக செய்வோம். அதற்காக பல தடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை