விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறாதீர்கள்- தீபச்செல்வன்!

 


நிகழ்வின் இறுதியில் ஏற்புரையாற்றிப் பேசிய தீபச்செல்வன், அவ்வாறு பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

 “நானோ, இந்தக் கவிதைகளினுடைய குரலோ, தமிழர்களோ பரிதாபத்தை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.மாறாக நியாயமான நீதியையும் நியாயமான அணுகுமுறையையும் சமத்துவமான பாரபட்சமற்ற ஒரு அணுகுமுறையையுமே இந்தக் கவிதைகள் எதிர்பார்க்கின்றன.


புலிகள் எங்கள் வீட்டுப் பிள்ளைகள்

அதைச் செய்வதுதான் சிங்கள சமூதாயத்தின் சிங்கள இலக்கிய கர்த்தாக்களினுடைய மனசாட்சியின் பதிலாக இருக்கும்.இங்கு பேசிய அன்புக்கும் மதிப்பிற்குமுரிய பிரியங்கர நிவுனுஹெல்ல விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று பேசியபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதனை நான் மறுக்கிறேன். கண்டிக்கிறேன்.


ஏனென்றால் என்னுடைய வீட்டில் எனது அண்ணா ஒரு விடுதலைப் புலிப் போராளி, எனது அண்ணா விடுதலைப் போராட்டத்தில் களச்சாவடைந்தமைக்கு அவருக்கு சமர்ப்பணமாகவே இந்த கவிதை நூலை எழுதினேன்.இலங்கை இராணுவத்தினர் ஒவ்வொருவரும் உங்களுடைய வீட்டுப் பிள்ளையோ, அதேபோல தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் எங்களுடைய வீட்டுப் பிள்ளைகள், எங்களுடைய வீட்டுப் பிள்ளைகள், எங்களுடைய சகோதரர்கள் என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவர்கள், வீடுகளில் இருக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்திற்கு போனவர்கள் அல்ல, தமிழர்களினுடைய உரிமைக்காகவும் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை கண்டும் தாங்கிக் கொள்ள முடியாமல் விடுதலைப் போராட்டத்திற்குச் சென்றவர்கள்.


முதலில் புலிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

எங்கள் வீடுகளில் இருந்து அதற்காகவே அவர்கள் சென்றார்கள். வீட்டுக்கொருவரல்ல, வீடுகளில் பலரும், முழுக்குடும்பமாகவும் விடுதலைப் போராட்டத்திற்கு சென்று இல்லாமல் போயுள்ளனர்.

அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்வதை வடக்கு கிழக்கிலுள்ள எந்தப் பிரஜையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எனவே இந்த அணுகுமுறை ஒருபோதும் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் இணைக்காது.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களினுடைய பிள்ளைகள், தமிழ் மக்களினுடைய வீரர்கள் என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.முதலில் சிங்களப் படைப்பாளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அங்கிருந்து தொடங்குவதுதான் மிகச் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

விடுதலைப் புலி மாவீரர் – போராளிகளை தீவிரவாதிகள் என்று சொன்னால் ஒருபோதும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் அல்லது இரு இனங்களுக்கு இடையிலான உறவும் ஏற்பாது…” என்றும் மேலும் கூறினார்.


மன்னிப்புக் கோரிய சிங்கள எழுத்தாளர்

இதேவேளை, சிங்கள எழுத்தாளர் பிரியங்கர நிவுனுஹெல்ல சிங்கள இதற்கு பதில் அளிக்கையில், வெகுசன ஊடங்களும் சமூகமும் இவ்வாறு கூறியமை தமக்குள் ஆழமாக பதிந்துவிட்டமையால்தான் அவ்வாறு தன்னை அறியாமல் கூறியதாகவும் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்த இலங்கை அரசின் அணுகுமுறைகளே காரணம் என்பதையும் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

நிகழ்வில் மின்சர பிரதேசத்தை சேர்ந்த இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.