ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன!

 


குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாச வீடியோக்கள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.


இதன்படி சமூக வலைத்தளங்களில் இவ்வாறு ஆபாசமான காணொளிகளை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான ஆபாச காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணை நடத்தி இந்த வருடத்திற்குள் தண்டனை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.