பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி!

 


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு கடமையாற்றிய இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கஹதுடுவ, உஸ்வத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் கடந்த 18ஆம் திகதி பலபிட்டிய பிரதேசத்தில் மனித கொலை செய்ய திட்டமிட்டமை தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சோதனையின் போது சந்தேகநபரின் வீட்டில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது விசேட படையணியில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.