3 வகையான உரங்களின் விலை 2000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. !

தேயிலை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் 3 வகையான உரங்களின் விலை 2000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 


தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 750, T 709 மற்றும் T 200 போன்ற உரங்களின் விலையை 2000 ரூபாவால் குறைக்க விவசாய மற்றும் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (16) தீர்மானித்தார். 


தற்போது சந்தையில் ஒரு மூட்டை உரத்தின் விலை 13 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. அதன்படி, சந்தையில் தேயிலை உரத்தின் விலை 50 சதவீதத்தால் குறையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


T 750 மற்றும் T 709 தேயிலை உர மூட்டையின் விலையை 5500 ரூபாவாக குறைக்குமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனங்களின் தலைவர் ஜகத் பெரேராவிற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.


இந்த உர நிவாரணம் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படுவதுடன், மேற்கூறிய


உரங்களை பாரிய தேயிலை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 9735 ரூபாவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இன்று (16) காலை கைத்தொழில் அமைச்சில் எட்டு மாவட்டங்களின் தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பாக பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எமது நாட்டில் தேயிலை கைத்தொழில் அபிவிருத்திக்கு உரத்தை கட்டாயமாக்கும் நடவடிக்கையாக இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் 

கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.