500 கோடி நிதி மோசடி


கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் 500 கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

(செய்திப் பின்னணி)

கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரொருவரும் அவரது கள்ளக்காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் "ட்ரெட்வின் ஷேர்" என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளார்.

இவர் மக்களை ஏமாற்றி கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்த பணத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கள்ளக்காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய நபரும் அவரது கள்ளக்காதலியும் நேற்று (27) பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.