வெள்ளவத்தையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணம்!
வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது கணவர் நேற்று முன் தினம் தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை