அமெரிக்காவில் பிரதிபலிக்கும் கிழக்கிலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவி!

அம்பாறை - அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார்.

இம்மாணவி கல்வியிலும் இதர செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கியதால் அமெரிக்காவில் 300 பாடசாலை மாணவிகள் ஒன்றிணையும் சமூக மேம்பாட்டு ஒன்றிய ஒன்று கூடலுக்கு பாத்திமா பேகம் ஜலீல் Westfield middle school சார்பில் தூதுவராக(Ambassador ) ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது மார்க்கத்தை கைவிடாது பாடசாலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு தன்னை தூதுவராக (Ambassador) அடையாளப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

அமெரிக்காவில் பல நாட்டு மாணவர்களுக்கு மத்தியில் பாத்திமா ஜலீல் தூதுவராக (Ambassador) தெரிவு செய்யப்படிருப்பது இவரின் திறமைக்கு ஒரு சான்றாகப் பதிவாகியுள்ளது.

தனது தந்தையின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததாக பாத்திமா ஜலீல் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.