பெண்ணொருவரின் மோசமான செயல்¡!
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றி தவணை முறையில் 20 - 75 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட பெண் கைதாகியுள்ளார்.
இத்தகவலை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த சிலர், பெண்ணின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளது.
சந்தேகநபரான பெண் , அவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துவழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
குருணாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட பொத்துஹெர, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே இவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர் .
கைதான 37 வயதுடைய சந்தேக நபர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை