ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு!

 


லிந்துலை -  பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் வீட்டுத் தோட்டத்தில் மின்சார வேலி பொருத்தப்பட்டிருந்ததாகவும், தோட்டத்தை பார்வையிட சென்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (16-01-2024) காலை இடம்பெற்றுள்ளது

மேலும், இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.