மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (2024.01.30) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெவசிரி கம என்ற பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
உயிரிழந்தவர் கடந்த 28 ஆம் திகதி மாலை மூன்று மணியளவில் கந்தளாய் குளத்திற்கு தனியாக மீன் பிடிக்க சென்ற நிலையில் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை.
கருத்துகள் இல்லை