டெங்கு நோயால் உயிரிழந்த குடும்பப் பெண்!


 யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது..

இதன்படி, இந்த ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள், 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 5,029 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், மேல் மாகாணத்தில் ஆயிரத்து எழுநூறு (1,700) நோயாளர்களும், வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (1,194) நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதிகளவான நோயாளர்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.