அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் 02ஆண்டு நினைவு நாளில் “எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக… கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!


  யாழ்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்கள் இறைபாதமடைந்து 02ஆம் ஆண்டு நினைவு தினமான   19.01.2024 இன்று  அன்னாரின் குடும்பத்தினரின் 200,000/= நிதி பங்களிப்பில் “ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் கற்றல் உபகரணங்களும்,மதிய உணவு வழங்கும் நிகழ்வும் தாயகத்தின் முல்லைத்தீவு/தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.


விருந்தினர்கள் வரவேற்ப்புடன் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து,மலர்தூவி,நினைவுச் சுடரேற்றி சிறப்பு ஆத்மா சாந்தி பிராத்தனைகளுடன் மதப்பிரமுகர்களின் ஆசியுரை,நினைவுரைகள் இடம்பெற்று 113 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பௌதிக வளங்கள் குறைந்த நிலையில் காணப்படும்  முல்லைத்தீவு/தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. மிக நெருக்கடி நிலையில்  வாழும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்பணி பெரும் ஆறுதலே.

 இப் பெரும் உதவியை நல்கிய அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகத்தினர் தமது  நன்றியையும் பகிர்ந்து நின்றனர்.


மேற்படி நிகழ்வில் மதகுருமார்கள், தென்னியன்குளம் கிராமசேவகர், பாடசாலை அதிபர், ஆசிரயர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்  ஏர் நிலத்தின் செயலாற்றுநர் படைபாளி தே.பிரியன் எர் நிலத்தின் செயலாற்றுநர் கவிஞர் முறிகண்டி லக்சிதரன் ஆகியோர் கலந்து நினைவுகூரல் நிகழ்வுடன்,கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வையும் சிறப்பித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.