சிவத்தமிழ் செல்வி!!
செயல்களால் பெண்ணவள்
சீர்மை தான் பெறுகிறாள்,
அவ்வழி தனிலே... ...
மானுடம் கண்ட
மகத்துவ பெண்ணாம்
சிவத்தமிழ் செல்வி தங்கம்மா
அப்புக்குட்டி.
துர்க்காதேவி சமஸ்தானம்
நிறை பெருமை கொள்கிறது
தங்க மங்கையான
தங்கம்மா அப்பாக்குட்டியால்...
எளிமையின் உருவான
ஏந்திழை இவராம்...
துயர்தனைக் கண்டால்
துடிக்கின்ற மனமாம்...
அறவழி நின்ற
அன்னையின் பணிகள்
அளப்பெரும் நிறைவாய்
சிறக்கிது மண்ணில்.
இறையது தந்த
அற்புத படைப்பு.
நல்லுலகின் நாயகி
தங்கம்மா அப்பாக்குட்டி.
அன்னை வரைந்து வைத்த
வண்ணக்கோலங்கள்
எத்தனை எத்தனை
இம்மண்ணில்..
அத்தனையும் ஒன்றாகி
அஞ்சலிக்கிறது இந்நாளில்...
கோபிகை.
கருத்துகள் இல்லை