லண்டனில் வீதியில் நிற்கும் குடும்பம்!!

 


வெளிநாட்டு மோகத்தால் மட்டக்களப்பு தம்பதிகள் 2 கோடி ரூபா கொடுத்து லண்டன் சென்ற நிலையில் , London South Harrow இல் தெருவில் நிற்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கணவன் - மனைவி இருவரும் அரச உத்தியோகம் பார்த்து வந்தவர்கள் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த மட்டக்களப்பு தம்பதி லண்டன் செல்லும் ஆசையால் 3 வயது குழந்தையுடன் அங்கு சென்று வேலை கிடைக்காததால் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உடுக்க உடையோ உண்ண உணவும் இன்றி , குழந்தையுடன் அவர்கள் நிர்க்கதியில் இருப்பதாக கூறப்படுகின்றது.

புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் வருவோர் கூறும் பகட்டு வார்த்தைகளை நம்பி, அரசாங்க உத்தியோகத்தையும் தூகி எறித்துவிட்டு   வெளிநாடு சென்றால் தாமும் வசதியாக வாழலாம் என நினைத்து இவ்வாறு பலர் துயரும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதை நாம் அறிகின்றோம்.

அதுமட்டுமல்லாது இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

நாங்கள் பார்த்துகொள்ளுவோம் வருங்கள் என கூறும் உறவுகள் , அங்கு சென்றதும் மாயமாகிவிடுவதனால் பலர் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை வேதனைக்குரியதாகும்.

எனவே   வெளிநாடு செல்ல ஆசைப்படுவோர் அங்கு செல்லும் முன்னர் உங்களுக்கான வேலை மற்றும் தங்மிடங்களை உறுதிசெய்துகொண்டு செல்லுங்கள். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.