பிரித்தானியாவில் இடம்பெற்ற மோசடி!!


 பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்களை மோசடி செய்த கும்பலுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம்  மேலும் தெரியவருகையில்,

குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை தமிழருடன் , டேரன் பெக் மற்றும் டெனிஸ் டீகன் ஆகிய மூவரும் Choice Option சார்பாக 'தரகர்களாக' செயல்பட்டனர், பின்னர், அந்த நிதி நிறுவனத்தில் நிர்வகிக்கப்பட்ட கணக்குத் திட்டத்தில் முதலீடு செய்ய பொதுமக்களை வற்புறுத்துவதற்கு அவர்களைத் தூண்டினர்.

குறித்த நிதி நிறுவனமானது வித்தியாசமான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டமானது இலங்கையரான 35 வய தலைமையில் செயல்பட்டுள்ளது. இவருடன் Darren Peck(43), மற்றும் Denis Deegan(49) என்பவர்களும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களின் பணத்தை அவர்கள் மூவரும் மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 2024 ஜனவரி 19ம் திகதி சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் இலங்கை தமிழர் உட்பட மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்துள்ளது.

இதனூடாக முதலீட்டாளர் மற்றும் நிறுவனத்திற்கு லாபத்தை உருவாக்குவதாக கூறப்பட்டுள்ளது. மட்டுமின்றி, முதலீடு செய்த மக்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த லாபம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திற்கு வங்கி கணக்கும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 2016ல், வாடிக்கையாளர்கள் தங்கள் ஒன்லைன் கணக்குகளை அணுக முடியவில்லை, நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை மற்றும் அவர்களின் பணத்தை திரும்பப் பெறவும் முடியாமல் போயுள்ளது.

அது மட்டுமின்றி லண்டன் பொலிசாருக்கு இந்த நிறுவனம் தொடர்பில் 2016 பிப்ரவரி மாதம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிதி நிறுவனம் ஊடாக மக்களை ஏமாற்றிய இலங்கையரின் மோசடி குறித்த தகவல் அம்பலத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.