மகிந்தவின் அறிவிப்பு!!


 எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதோடு அவர்கள் எந்தவொரு அரசியல் தீர்மானங்களிலும் அங்கம் வகிக்கவில்லை எனவும் கூறிய மஹிந்த,

கட்சிக்கு எதிராக கூறப்படும் தேவையற்ற கருத்துக்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் மகிந்த ராஜபக்க்ஷ கூறினார்.

இது தொடர்பில் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மூலமே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்; குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல. எனது உறவினரின் கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது.

அவர்களை நேர்காணல் செய்வது நியாயமற்றது. தேவையற்ற கருத்துகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அதிக வரிகளுக்கு எனது கட்சி எதிரானது.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எனது கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.