புத்தாண்டு கவிதை!!
புத்தாண்டே வருக...
புதுமைகள் நிறைந்திட
பெருமைகள் பெருகிட
சிறுமைகள் கழிந்திட
புத்தாண்டே வருக. .
பழையன கழிதலும்
புதியன புகுதலுமாய்
இனியன பெருகிட
புத்தாண்டே வருக...
கடந்த இவ் ஆண்டில்
கற்றவை எல்லாம்
பட்டறிவாகிட
புத்தாண்டே வருக.
எண்ணங்கள் ஏற்றமாய்
வண்ணங்கள் கண்டிட
சிந்தனை சேர்ந்து
சிற்பங்கள் செய்திட
புத்தாண்டே வருக. .
வருகின்ற ஆண்டேனும்
விடியல் தந்திட
விரைந்து வந்திடு
இனிய புத்தாண்டே....
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை