விடியல் தேடும் பறவைகள்!!

 


ஒரு தேசத்தின் 

புள்ளினங்களாய்

பாடிக்கொண்டிருந்த

எம் வாழ்க்கை 

வலி தந்த 

வாழ்வியலாய்

மாறிப்போச்சுது. 


ஊரும் உறவும் 

தூரமாய்  போய்விட

அகதி வாழ்வு அவலமாய்

அங்கும் இங்கும்... 


புழுதி வாசத்தின்

ஏக்கத்தில்

புரையோடிப்போகுது

வாழ்க்கை. 


கனவுகள் சுமந்த நிலம்

கதை பேசுது சோகமாய்... 

உணர்வுகள் தொலைந்து

நாமெல்லாம் ஜடமாய்... 


இயற்கையும் அழித்திட

இறைமையும் மறைந்திட

எதோ நடக்கிறோம்

கூடுகளாய் நாமிங்கு. 


விடியலைத்தேடி மனம்

வேகுது நாளுமிங்கு. 

கடக்கும் நாளிகைகள்

காத்திருக்குதே ஏக்கத்தோடு... 


கோபிகை. 






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.