நினைவுகள் - கவிதை!!

 


பால்யத்தில் மனக்கவலையில்லையெனப் பிதற்றுகிறவர்கள்...

பள்ளி செல்கையில் 

மழைத்துளிப் பட்டு சிலேட்டுப் பலகையில் எழுதிய வீட்டுப் பாடம் அழிந்து விடக் கூடாதென பட்ட கவலையும் 

வீட்டிற்கு நடந்து வருகையில்

எதிர் வரும் வாகனங்கள் குழியிலிறங்கி சேறடித்தால்

நாம் தான் தவறில்லாமலே

இப்படி இனிமேல் சேறடித்து வருவாயாயென அடிவாங்குவோமென அறியாதவர்கள்

அறியாத வயதில் நடந்து பள்ளிக்குப் போகாதவர்களின் கூக்குரலை செவிமடுக்காதீர்கள்

அம்மா சோறாக்க நேரமானாலும் வாத்தியார் வெளியே நிற்க வைக்க சுள்ளென்று அடித்த வெயிலில் சுருண்டு போனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த நமக்குத் தானே தெரியும்...

ஊரிலிருந்து வரும் ஆயா ஐந்து ரூபாய் தரும் வரை

ஐந்து பைசாவுக்கு ஜவ்வு மிட்டாய் வாங்க காசில்லாமல் கழித்த 

பள்ளி நாட்கள் 


பூங்கோதை கனகராஜன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.