சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில்!
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரிடம் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் சுமார் 10 வருடங்களாக சனத் நிஷாந்தவின் சாரதியாக பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்றுவரும் சாரதியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை