சிறீதரன் எம்.பி தமிழக முதல்வருக்கு, கடிதம்!
உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம்.
மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத் தண்டனையின் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி, இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும், இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில், சாந்தனின் தாயாரால், தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தின் விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல் நிலை கருதியும், அவரது குடும்பத்தின் உணர்வு நிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும், சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு, தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை