கல்விப் புலத்தினர் கண்விழிக்க மாட்டார்களோ?

 


கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பெயர்ப் பலகை இற்றைவரை மாற்றப்படவில்லை!


மோசடியான முறையில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையே  இன்னும் - இன்றும் காணப்படுகின்றது.


கல்விப் புலத்தினர் கண்விழிக்க மாட்டார்களோ? அல்லது,

இதற்கும் நாங்கள் போராடத்தான் வேண்டுமா? என சுகாஸ் கனகரட்னம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் வெளியிடப்பட்ட அறிக்கை கீழே.

இந்த அநியாயத்தை எவ்வாறு பொறுப்பது?


#கிளிநொச்சி #நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் திரு.சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது...தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லீம் மாணவர்களும் கற்று வருகின்றனர்...இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது...ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லீம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் #பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது - மறைக்கப்பட்டுள்ளது.


ஆனால் இற்றைவரை குறித்த பாடசாலையின் #உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும்...இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.(ஆதாரம் படம் 3இல்)


ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக #மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்?

இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்?


உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை #கிளிநொச்சி #நாச்சிக்குடா #அரசினர் #தமிழ்க் #கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம்!


உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் #தமிழ் மக்களையும் #முஸ்லீம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள்!


உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் #சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும்.


படம் 1: 1995 இல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாடசாலையின் பெயர்ப்பலகை.


படம் 2 : தற்போதைய பெயர்ப்பலகை.


படம் 3: இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர்.


படங்கள் 4,5 : அ.த.க பாடசாலை என்பதை உறுதிப்படுத்தும் ஏனைய சில ஆதாரங்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.