மூத்தோர் வகுத்த நெறி!!
*திசையை*
எட்டாகப் பிரித்த
நம் முன்னோர்கள்..
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு
திசையை
எட்டாகப்
பிரித்தவர்கள்,
*இசையை*
ஏழாக
கொடுத்தார்கள்..
*ச ரி க ம ப த நி*
இசையை
ஏழாக
கொடுத்தவர்கள்,
*சுவையை*
ஆறாக
பிரித்தார்கள்...
இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு
சுவையை
ஆறாக
கொடுத்தவர்கள்,
*நிலத்தை*
ஐந்தாக
பிரித்தார்கள்...
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
நிலத்தை
ஐந்தாக
பிரித்தவர்கள்
*காற்றை*
நான்காக
பிரித்தார்கள்...
தென்றல்
வாடை
கோடை
கொண்டல்
காற்றை
நான்காக
பிரித்தவர்கள்
*மொழியை*
மூன்றாக
பிரித்தார்கள்..
இயல்
இசை
நாடகம்
மொழியை
மூன்றாக
பிரித்தவர்கள்,
*வாழ்க்கையை*
இரண்டாக
வகுத்தார்கள்...
அகம்
புறம்
கணவன் மனைவி
வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை...
வெளியில் இருக்கும்
வியாபாரம் மற்றும்
விவசாயம் எல்லாம்
புற வாழ்க்கை...
வாழ்க்கையை
இரண்டாக
வகுத்த
தமிழரகள்...
*ஒழுக்கத்தை*
மட்டும் ஒன்றாக
வைத்தார்கள்...
அதை
உயிரினும்
மேலாக
வைத்தார்கள்...
இதைத்தான்
அய்யன் *வள்ளுவர்*
இரண்டு அடியில்
அழகாகச் சொல்கிறார்...
"ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் !!
என்றும் அன்புடன்...!
தமிழ் ஈசன்
கருத்துகள் இல்லை