இது சிந்தனைக்காக....!!

 


பரந்து விரிந்த காணிகள் 

பரப்புகள் ஆனதென்ன 

முருங்கை மரங்கள் நிறைந்த வேலிகள் 

யாவும் மதில்களால் மறைந்ததென்ன ?


அவரை கொடிகள் 

அடியோடு அழிந்ததென்ன 

கோவை கொடிகள் 

கொள்ளை போனதென்ன 

கீரைகள் கீழ்த்தரமானதென்ன?


பத்து ரூபாய் தேங்காய் 

பக்கத்து வீட்டுக்கு 200 ரூபாய்க்கு 

ஏலம் விடுவதென்ன 

தக்காளியா தங்கமாயென 

விலையை கேட்டு 

விக்கி நிற்பதென்ன 

கத்தரிக்காய் காணாமல் 

போனதென்ன 

கறிவேப்பிலை கூட 

காசுக்கு தான் என்ற 

நிலை நிரந்தரமானதென்ன?


அகத்திக்கீரை அந்நியமானதென்ன 

பச்சைமிளகாயின் காரத்தை 

விட விலையை கேட்டே 

விம்மி அழுவதென்ன 

வெங்காயத்தை உரிக்கமாலே

விலைக்கே 

விழிநீர் வழிவதென்ன ?


(வேளாண்மை வெள்ளாமை )

விவசாயம் செய்வதை வெறுத்தே 

வெள்ளைக்காரனாய் மாறி 

குளிரூட்டப்பட்ட அறையில் 

அறையில் கூடி கூடி 

கூட்டம் கூட்டமாய் 

கூட்டம் போட்டோம் குதுகாலமாய் 


இன்று 

வெளிநாட்டுக்காரன் தருகிறானாம் 

கறிவேப்பிலையும் கத்தரிக்காயும் 

கையேந்துவோம் கடனாக 


வளமான இலங்கை

வளம் இழந்து நிற்கிறது 

கனவான வாழ்வுதனை 

கழிப்போமே கடனோடு...



இரா. தேவி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.