TIN இலக்கம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!
வரி அடையாள (TIN) இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை நிதியமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை