பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமே சுடரி விருதுகள்-பிரித்தானியா!

 


சுடரி விருதுகளானது இலங்கையில் போர் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களின் கடுமையான விளைவுகளை தாங்கிக்கொண்டு சவாலை சாதனையாக்கி ஓளிரும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் கலங்கரை விளக்காக திகழ்கிறது.போரால் பெண்கள் பல வேதனைகளையும் அத்துமீறல்களையும் எதிர்கொண்டு அதனை தாங்கி தங்கள் சமூகத்துக்காக சேவையாற்றி உள்ளனர்.தாய் நாட்டில் வாழ்ந்த போதும் புலம்பெயர்ந்த பின்னாலும் அவர்கள் வழங்கிய அல்லது வழங்கி வரும் விலை மதிப்பற்ற பங்களிப்புக்கள் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை.இதனை கருத்தில் கொண்டு பிரித்தானியா பெண்கள் அபிவிருத்தி மன்றம் எடுத்திருக்கும் முயற்சியே சுடரி விருதுகள். 


இந்த விழாவினுடாக சாதனைப் பெண்களுக்கான கௌரவிப்புடன் தாய் நாட்டில் வாழும் பெண்களின் வாழ்விற்கு சுடரேற்றும் முயற்சியையும் சுடரியினூடாக தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம் காத்திரமாக முன்னெடுக்கிறது.


நம் பெண்கள் ஆங்கிலம் முதன்மை மொழியாக இல்லாத சமூகங்களில் இருந்து உருவாகி புலத்தில் மேலைத்தேய நாடுகளில் தம் திறமைகளை வெளிக்காட்டி கல்வி மற்றும் அனைத்திலும் பெயரை நிலைநிறுத்தி பிரகாசிக்கின்றனர். புத்திசாலித்தனம் என்பது மேற்கத்திய மொழிகளின் புலமையுடன் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது என்ற புரிதலில் உள்ள தவறான கருத்து அவர்களின் சாதனைகளால் நீக்கப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொண்ட இடங்களில் இருந்து ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்று புலம்பெயர் நாட்டில் நின்று சாதிக்கும் அவர்களின் பயணம் அவர்களின் அசாதாணர மனஉறுதிக்கு சான்றாகும்.


வெற்றி என்பது மொழிப்புலமையால் மட்டுமே அளவிடப்படுகிறது என்ற பரவலான நம்பிக்கைக்கு மாறாக சுடரி விருதுகள் சமூகத்தில் உள்ள திறமையான முன்மாதிரியான பெண்களை அடையாளப்படுத்தி அங்கீகரிக்க முனைகின்றது . வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலங்கை தமிழ் பெண்களின் வரலாற்றை வெளிப்படுத்தி அவர்களின் சாதனைகளை நிலைநிறுத்துவதே முதன்மை நோக்கமாகும். 


எமது பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமே சுடரி விருதுகள்.


விருது விழா என்பதை தாண்டி சுடரி நிதி திரட்டும் முயற்சியையும் முன்னெடுத்துள்ளது. கிழக்கிலங்கையில் பெண்களை வலுவூட்டி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அண்மைய திட்டத்தில் கவனம் செலுத்துகின்றது. போரில் துணையை இழந்து பொருளாதார சிக்கலின் மத்தியில் வாழ்வாதார சவாலை எதிர்நோக்கி நிற்கும் பெண்களுக்கு கைகொடுக்கிறது. பெண்களுக்கான வலுவூட்டல் செயற்றிட்டம், மன மற்றும் உடல் ரீதியான தயார்ப்படுத்தலை மேற்கொண்டு பெண்கள் தம்மை தாமே சமூகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வழி கோலுவதாக அமைந்துள்ளது. இதனுடாக வாழ்வாதார மேம்பாடும் சமூக மேம்பாடும் சாத்தியமாகிறது.சமூக மேம்பாடு உறுதியான சமூக மாற்றத்திக்கும் நிலைபேறான சமூக அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் என நம்புகின்றோம்.


பிரித்தானியா வாழ் சாதனைப்பெண்களுக்கான அங்கீகாரத்துடன் தாயக பெண்களை வலுவூட்டும் சுடரி விருதுகளின் முக்கியத்துவம் உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து விழாவை சிறப்பிப்போம். எம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கு கரம் கொடுப்பதாக அமையட்டும்.


27/01/2024 அன்று நடைபெற உள்ள சுடரி விருது விழாவிற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி கலந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


கட்டணம் 

£30 (16 வயதிற்கு மேல்)

£15  (6-15 வயது)

5 வயதிற்குக் கீழ் இலவசம்


ஹரோ பைரன் மண்டபம்

HA3 5BD

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.