யுவதியின் கல்லறைக்கு சென்ற தந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி!


பதுளை மாவட்டத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, ஆடைகளை கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரஷ்மிகா மதுஷானி என்ற இளம் பெண் நிமோனியா காய்ச்சலால் கடந்த புதன்கிழமை (03-01-2024) உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அனைத்து மத சடங்குகளுக்கு பின் இளம் பெண்ணின் சடலம் அடுத்த நாள் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த யுவதியின் பிறந்த தினமான இன்று (07-01-2024) யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது ​​தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, ஆடைகள் இன்றி நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.