VAT விதிக்கப்படுவது மகிழ்ச்சியுடன் அல்ல.. சோகத்துடன்!


 நாட்டை பொருளாதார ரீதியில் புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், தொடர்ந்தும் VAT விதிக்கும் கொள்கை அரசாங்கத்திடம் இல்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ விகாரகல கிராமத்தின் விவசாய குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

VAT அதிகரிப்பால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று சமூகத்தில் இன்றைய காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சில பொருட்களின் விலை உயரலாம். ஆனால் இந்த வரிகளை விதிப்பதில் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை.

ஆனால், அரசாங்கம் பொருளாதார ரீதியாக இந்த நாட்டை மீட்டெடுக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து VAT வசூல் செய்யும் கொள்கை அரசிடம் இல்லை.

VAT காரணமாக உரங்களின் விலை உயருமா என விவசாயிகள் என்னிடம் தொடர்ந்து கேட்கின்றனர். இந்த பருவத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நான் கூறுகின்றேன். 

அவை பழைய விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதற்கு VAT எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. எனவே,  இந்த பருவத்தில் விற்கப்படும் உரங்களின் விலையை உயர்த்த முடியாது.

யாரேனும்  அதிக விலைக்கு விற்றால், அவர்களிடம் பில் வாங்குங்கள். அதனை எங்களுக்கு அனுப்புங்கள். தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கின்றோம்” என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.