1000 கோடிக்கு மேல் வசூல்-நடிகர் விஜய்!

 


விஜய் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். வெங்கட் பிரபு இப்படத்தை இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மார்ச் மாதம் இறுதி வரை படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

Greatest Of All Time படத்திற்கு பின் விஜய் நடிக்கப்போகும் படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. வழக்கமாக தான் ஒரு படத்தில் நடித்திக்கொண்டிருக்கும் போதே, தன்னுடைய அடுத்த படத்தை விஜய் அறிவித்துவிடுவார். ஆனால், தற்போது Greatest Of All Time படத்தின் பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட தன்னுடைய அடுத்த படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் விஜய் வெளியிடவில்லை.

அரசியலுக்கு செல்வத்தினால் தான் தன்னுடைய அடுத்த படத்தை விஜய் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அரசியலுக்காக தான் இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க போகிறாராம். ஆனால், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விஜய் இதுவரை வாய்யை திறக்கவில்லை. அதற்கான வேலைகளை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறார். 2026 தமிழக தேர்தலுக்காக தான் விஜய் தயாராகி வருகிறார் என சொல்கின்றனர்.

இந்நிலையில், 2026 தேர்தலுக்கு இடையே அடுத்த படத்தை நடித்து முடித்துவிடலாம் என முடிவு எடுத்துள்ளாராம். தெலுங்கில் ராஜமௌலி இயக்கி வெளிவந்த RRR படத்தின் தயாரிப்பு நிறுவனம் DVV Entertainment நடிகர் விஜய்யை அணுகி கால்ஷீட் கேட்டுள்ளார்களாம். இதுவரை விஜய் வாங்கிறாத சம்பள தொகையை அந்த தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் DVV Entertainment தயாரிப்பில் தன்னுடைய 69வது படத்தில் தளபதி விஜய் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது. Gretest Of All Time படத்திற்கே ரூ. 200 கோடி சம்பளம் வாங்கிய விஜய், கண்டிப்பாக தன்னுடைய 68வது படத்திற்கு ரூ. 250 கோடியாவது சம்பளமாக வாங்குவார் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் DVV Entertainment உடன் விஜய் இணைகிறாரா இல்லையா என்று.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.